கனடாவில் காணாமல் போன தமிழர் குறித்த விபரங்கள் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதில் பத்மசிங்கம் குமரசிங்கம் என்ற 80 வயது முதியவர் கடந்த மே மாதம் 31ஆம் திகதி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MISSING MAN:
Pathmasingham Kumarasingham, 80
– last seen May 31, 12:00 pm, Church st & Adelaide St E
– 5’7″, med build, receding hairline, clean shaven, mask under chin
– jogging pants, white t-shirt, dark running shoes, Adidas jacket
– nickname “Manager”#GO1021465
^ep2 pic.twitter.com/Rneqr8mEW2— Toronto Police Operations (@TPSOperations) June 5, 2020
பத்மசிங்கம் கடைசியாக Church st & Adelaide St E பகுதியில் காணப்பட்டுள்ளார்.
5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட பத்மசிங்கம் காணாமல் போன அன்று தனது வாய்க்கு கீழே தாடை பகுதியில் மாஸ்க் அணிந்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளை நிற சட்டை, ஜாகிங் பேண்ட் அணிந்திருந்த பத்மசிங்கத்தின் பட்டபெயர் மேனேஜர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிசாரிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.