கிளிநொச்சியின் பரந்தன் தபால் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகம் விசமிகள் சிலரால் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் பெறுமதியான எந்தப் பொருட்களும் திருடர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கவில்லை என பரந்தன் தபால் அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.00மணிக்கு பூட்டப்பட்ட தபாலகத்தை மீண்டும் இன்று காலை கடமைகளுக்காக திறந்த போதே பாதுகாப்புப் பெட்டகம் கோடரியால் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பெட்டகத்தினை உடைப்பதற்காகப் பயன்படுத்திய கோடாரியையும் திருடர்கள் விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.