திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடாத்திய நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சீனக்குடா பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மது அருந்தி விட்டு வீதியால் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் அரச போக்குவரத்திற்கு சொந்தமான பஸ் ஒன்றும், தனியார் பஸ்ஸொன்றும், வான் மற்றும் முச்சக்கரவண்டி போன்றவற்றை சேதமாக்கி உள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சீனக்குடா, கொட்பே பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.