சோறு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு… இதனால் இரவு சாப்பிடுவதிலும் பிரச்னை இல்லை…
நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அதேசமயம் குடல் ஆரோக்கியம் வலுபெறும்…
அரிசி சோறு வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று தோஷங்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியது…
சோறில் அமினோ ஆசிட் இருப்பதால் தசை பிடிப்புகளும் இருக்காது.
இந்த அமினோ ஆசிட் சரும நிறத்தை கூட்டி பொலிவு தரும். சருமத்தின் நச்சு நீக்கியாகவும் செயல்படும். தலைமுடி கருமைக்கும் நல்லது.
அதேபோல் அரசியை சமைக்கும் முன் ஊற வைத்து சமைத்தால் அதில் கிடைக்கக் கூடிய வைட்டமின் B1 மற்றும் B3 இதயத்திற்கு நல்லது.
அதில் உள்ள ஸ்டார்ச் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, புற்றுநோய்க் கிருமிகளையும் அழிக்க உதவும்.
எனவே மூன்று வேளையும் சோறு, அதற்கு சமமான காய்கறிகள், கீரை வகைகளையும் உணவோடு சேர்த்துக்கொள்வது நோயற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்…
அதுவும் மோர் சேர்த்த பழைய சாதம் குடல் வயிறு சம்பந்தமான நோய்களை எளிதே குணமாக்கும்..
இப்பெல்லாம் சிலர் சோறுன்னு சொன்னாலே ஏதோ தீண்டத்தகாத உணவு போலவும்…
மற்ற உணவுகளையும் கௌரவமாகவும் நினைப்பது கொஞ்சம் வருத்தமே.