கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாதிப்பிற்குள்ளான குடும்பங்களிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரு விவசாயிகள் இன்று மாலை சமூர்த்தி காரியாலயத்தின் கூரையின் மேல் னர்.
சுமார் 650 குடும்பங்களைச் சேர்ந்த தமது கிராம சேவக பிரிவில் உள்ள 602 பேருக்கு அரசாங்கம் 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்கியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் 48 குடும்பங்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். 5000 ரூபாய் கொடுப்பனவு பெறாத ஏனைய குடும்பத்தினரும் சமூர்த்தி காரியாலயத்திற்கு முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.