கருப்பினத்தவரான ஜார்ஜ் கொல்லப்பட்டதை எதிர்த்து அமெரிக்காவில் பல இடங்களில் வன்முறை வெடித்தாலும், பல்வேறு இடங்களில் அதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
பொலிசார் பலர் கருப்பினத்தவர் முன் மண்டியிட்ட சம்பவங்களும் நடந்தேறின. இதற்கிடையில், வட கரோலினாவில் கருப்பினத்தவர் சிலரது கால்களை வெள்ளையின பொலிசாரும் வேறு பலரும் கழுவும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இயேசு நாதர் தனது சீஷர்களின் கால்களை கழுவியதைப் போல் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஜார்ஜ் கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், இனவெறியை முடிவுக்கு கொண்டு வரவும் கோரி மக்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.
அங்கு கூடிய மக்கள் எட்டு நிமிடங்கள் 46 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தியபின் நாட்டுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், மூன்று பொலிசாரும் மேலும் சிலரும் கருப்பினத்தவர் கால்களை கழுவுவதைக் காணமுடிகிறது.