வெளிநாட்டில் கர்ப்பிணி மனைவியை சொந்த ஊருக்கு அனுப்பிய ஒரு மாதத்திற்கு பிறகு கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கூடு மாவட்டத்தின் Perambra பகுதியை சேர்ந்தவர் நிதின். 29 வயதான இவர் துபாயில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றி பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு அதிரா என்ற மனைவி உள்ளார். அதிராவும் துபாயில் இருக்கும் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கேரள இரத்த தானம் செய்பவர்களின் துபாய் அத்தியாயத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், இந்திய கலாச்சாரம் மற்றும் கலை சங்கத்தின் (INCAS) தீவிர உறுப்பினராகவும் நிதின் இருந்தார்.
இந்நிலையில், அவருடைய மனைவி அதிரா கர்ப்பமாக இருந்ததால், தனது மனைவியை பிரசவத்திற்காக கேரளாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தை நாடினார். அதன் மூலம் ஊடகங்களில் நிதின் பெரிய அளவில் பேசப்பட்டார்.
அவரின் மனு ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்தியர்களை வீடு திரும்பும் திட்டம் இந்திய அரசுக்கு இல்லை, இந்தியாவின் வந்தே பாரத் மிஷனை(சொந்த நாட்டிற்கு திரும்பும் விமானங்கள்) மே 7 அன்று மட்டுமே என்று அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து மே மாத துவக்கத்தில் அதிரா கேரளாவிற்கு திரும்பினார். மனைவியை வீட்டிற்கு அனுப்பிய பின்பு துபாயில் தங்கியிருந்த நிதினுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கு அவருக்கு இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார்.
இது குறித்து துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதர் விபுல், நிதின் இறந்ததைப் கேட்டு நான் அதிர்ச்சியடைகிறேன், அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார், வந்தே பாரத் மிஷனில் திருப்பி அனுப்பப்பட்ட முதல் நபர்களில் ஒருவர்.
சமூகத்திற்காக நிறைய உழைத்தார், குறிப்பாக இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் COVID சூழ்நிலையில் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபட்டு வந்தார். அவரின் குடும்பத்திற்கு எனது உண்மையான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த பெரிய மற்றும் அகால இழப்பை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிதின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும், அவரது மனைவி சொந்த ஊருக்கு செல்லும் போது இரண்டு பேருமே பரிசோதனை செய்யப்பட்டனர். அப்போது நிதின் மற்றும் அவரது மனைவி எதிர்மறையான சோதனைகளை பெற்றனர்.
ஒரு வருடத்திற்கு முன்பு இருதய நோய்க்காக சிகிச்சை பெற்றிருந்த நிதின், அதன் பின் மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், அதற்கு சிகிச்சை பெறாமல் தொடர்ந்து வேலை செய்து வந்ததாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
நிதினின் இந்த மரணச்செய்தி அவரின் மனைவி அதிராவுக்கு பெரும் அதிர்ச்சியாகவே இருந்திருக்கும், ஒரு மாததிற்கு முன்பு பார்த்த கணவன், இப்போது பிறக்க போகும் குழந்தையை கூட பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.