லண்டனில் பூங்காவில் இரண்டு பெண்கள் இறந்து கிடந்த நிலையில், அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Wembley-ல் இருக்கும் Fryent Country பூங்காவில் நேற்று பிற்பகல் இரண்டு பெண்கள் இறந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை, விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் முறையாக அடையாளம் காணாததால், உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது இவர்கள் மரணம் தொடர்பாக கொலை விசாரணை துவங்கப்பட்டுள்ளது. பலியானவர்கள் இரண்டு பேரும் சகோதரிகள் எனவும், அவர்களில் ஒருவரின் பெயர் Nicole Smallman(27) மற்றொருவரின் பெயர் Bibaa Henry(46) என்பதும் தெரியவந்துள்ளது.
இதில் Nicole Smallman நகரின் Harrow மற்றும் Bibaa Henr நகரின் Brent-ல் வசித்து வந்துள்ளனர்.
Bibaa Henr-ன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடந்த 5-ஆம் திகதி இரவு 7 மணியளவில் சுமார் 10 பேர் குறிந்த பூங்காவில் கூடியுள்ளனர்.
Nicole Smallman மற்றும் Bibaa Henr மட்டுமே பூங்காவில் கடைசி வரை இருந்துள்ளனர், மற்றவர்கள் அனைவரும் அன்று படிப்படியாக வெளியேறியுள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டுக்கு திரும்பாத காரணத்தினால், மறுநாள் 6-ஆம் திகதி இருவரும் காணமல் போய்விட்டதாக கூறி, பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிசார் இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.