கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்த 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நண்பகல் தூதரகம் முன் முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அமெரிக்காவில் கறுப்பின நபர் கொலையை கண்டித்து இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் நேற்று தடை உத்தரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




















