அமெரிக்காவில் பொலிஸ் கைது நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் இரண்டு வாரங்களுக்கு பின்னர் இன்று சொந்த நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஹூஸ்டனில் உள்ள Fountain of Praise என்ற திருகோவிலில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் கலந்துகொண்ட இறுதிச்சடங்கு நடைபெற்றது.
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்களுக்கு தேவாலயத்தினுள் அனுமதி மறுக்கப்பட்டாலும், ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அனுப்பியுள்ள வீடியோ செய்தியில், நீங்கள் இதுபோன்ற ஒரு நிலையை இனி உணர மாட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் அவரது தாயாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகாமையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஃபிளாயிடின் குடும்பத்தார் சுமார் 5,000 விருந்தினர்களை இந்த இறுதிச்சடங்கு நிகழ்விற்கு அழைத்திருந்தனர்.
ஆனால் மொத்த ஹூஸ்டன் நகர மக்களே திரண்டு வந்ததுபோன்ற கூட்டம் தேவாலயத்திலும் வெளியேயும் காணப்பட்டது.