தமிழகத்தில் கணவனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு சரண் அடைந்த மனைவி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நாகலூரை சேர்ந்த சேவியர் என்பவர் கொலை செய்யப்பட்டவர் ஆவர். குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி மேரி தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.
இதனை அடுத்து தலைமறைவாக இருந்த மேரியை பொலிசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பொலிசாரை தேடி வந்த மேரி சரணடைந்தார்.
மேரியிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், கணவர் சேவியர் தினதோறும் குடித்துவிட்டு வந்து தன்னையும் தனது மகனையும் துன்புறுத்துவதாக அவர் வாக்குமூலம் வழங்கினார்.
இதனை அடுத்து மேரியை கோவை சிறையில் அடைந்த பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.