முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்திய போதே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பை நடத்திய சம்பவம் தொடர்பாக ராஜித சேனாரத்ன கடந்த மாதம் 13ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.