வருகிற யூலை 1ம் திகதி முதல் ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள் முழுவதுமாக திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மார்ச் மாதத்தில் ஐரோப்பிய நாடுகள் தனது எல்லைகளை மூடின.
தற்போது சில நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் யூலை 1ம் திகதி எல்லைகள் திறக்கப்படலாம் என தெரிகிறது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களுக்கு மட்டுமே எல்லைகளில் நுழைய அனுமதி வழங்கப்படலாம்.
எனினும் அத்தியாவசியமற்று பயணிப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றே தெரிகிறது.
இதுகுறித்து பெல்ஜியத்தின் உள்துறை அமைச்சர் கூறுகையில், எல்லைகள் திறக்கப்படுவது தொடர்பில் பெரும்பாலான நாடுகளில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இது தாமதமாகலாம் என தெரிவித்துள்ளார்.



















