தவறிய அழைப்பொன்றினால் (மிஸ் கோல்) யாழில் யுவதியொருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாகியுள்ளார். அவரை 3 இளைஞர்கள் கூட்டு வல்லுறவிற்குள்ளாக்கியதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
அண்மையில், யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து கொடிகாமத்திற்கு காதலர்களை சந்திக்க சென்ற இரண்டு யுவதிகள் கடத்தப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் தப்பித்து, பொதுமக்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிசாரிடம் தஞ்சமடைந்ததாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
சுன்னாபத்தை சேர்ந்த யுவதியொருவருக்கு தவறிய அழைப்பொன்று சென்றிருந்தது. வழக்கமாக, தவறிய அழைப்பின் பின்னர் நடக்கும் காதல் கதையே அங்கும் நடந்தது.
முகம் தெரியாமல் சுன்னாகம் யுவதியும், கொடிகாமம் இளைஞனும் நேரில் சந்திக்காமல் தொலைபேசியிலும், வீடியோ கோலிலும் பேசி வந்துள்ளனர். பின்னர் , இருவரும் சந்திக்க திட்டமிட்டு, தனது நண்பியான 16 வயதுடைய இன்னொரு யுவதியுடன் கொடிகாமம் சென்றார். அங்கிருந்து வரணி எல்லையிலுள்ள மாசேரிக்கு அவர்களை காதலர்கள் என கூறப்படும் இளைஞர்கள் இருவர் அழைத்துச் சென்றனர்.
பின்னர் வடமராட்சி கிழக்கிலிருந்து வந்ததாக கூறப்படும் இளைஞர் குழுவொன்று அவர்களை கடத்த முயற்சித்ததாகவும், இளைஞர்களின் பிடியிலிருந்து 16 வயது யுவதி தப்பித்ததாகவும் கூறப்பட்டது. 16 வயது யுவதி கொடிகாமம் பொலிசாரிடம் தஞ்சமடைந்திருந்தார்.
கடத்தப்பட்ட பெண், மிஸ் கோல் மூலம் அறிமுகமான காதலர்கள், கடத்தல் குழுவை பருத்தித்துறை, கொடிகாமம் பொலிசார் இணைந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் நேற்று பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்தார். இளைஞர்கள் மூவர் தன்னை கூட்டு வல்லுறவிற்குள்ளாக்கியதாக அவர் தெரிவித்தார்.