யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக இள குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்தன் டிலக்சனா (28) என்ற பெண்ணே இவ்வாறு மரணித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முந்தினம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி நீதிவானின் பணிப்பின் பிரகாரம் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி சிரேஸ்கரன் தவமலர் விசாரணைகளை மேற்கொண்டார்.
இதனையடுத்து , யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.