யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் இனந்தெரியாத நபர்கள் க மேற்கொண்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டில் காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மீசாலை வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த நரேந்திரகுமார் சசிவர்மன் (28-வயது) என்பவரே காயமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.