பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்த 450 பேரின் உறவினர்கள் உடனடியாக பொது விசாரணைக்கு கோருகின்றனர்.
வைரஸின் தொடர்ச்சியான விளைவுகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை அவசரமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் உயிரிழந்தோரின் குடும்பங்கள் வலியுறுத்தியுள்ளன.
முழு விசாரணை பின்னர் நடைபெறும் என்று உயிரிழந்தோரின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் எல்கன் ஆபிரகாம்சன் கூறுகிறார்.
தொற்றுநோயைக் கையாள்வதிலே அதன் தற்போதைய கவனம் இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.
ஆனால் அதிக இறப்புகளைத் தடுக்க உடனடி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அமைச்சர்கள் விசாரணையைத் தொடங்க காத்திருப்பது உயிர்களை இழக்க நேரிடும் என்றும் கொரோனாவால் இறந்துபோன குடும்பங்களுக்கு நீதி கோரும் பிரித்தானியா குழு கூறுகிறது.