அரசியல் தலைமை என்பது மக்களை வழிநடத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, நடைமுறைச் சாத்தியமற்ற மக்களின் விருப்பங்களின் பின்னால் இழுபட்டு செல்வதாக இருக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே திடமான அரசியல் கொள்கை, அதனை அடைவதற்கு தேவையான வழிமுறை பற்றிய தெளிவு, மனவுறுதி போன்றவை இருந்த போதிலும் மக்கள் ஆதரவு போதியளவு இதுவரை கிடைக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், இதன்காரணமாகவே இலக்கினை இதுவரை அடைய முடியாமல் இருப்பதாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் மன்னார் மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்களை இன்று சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்துடன் கட்சியின் வேலைத் திட்டங்கள் தொடர்பான சந்தேகங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டள்ள அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா மாவட்டத்தின் பல பாகங்களிலும் பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுத்துவருகின்றார். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.