கொழும்பு முதல் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரை செல்லும் கடற்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதியில் மிகவும் இருண்ட காலநிலை நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் இடப்படும் மீனவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.