சுவிட்சர்லாந்தில் சொந்த தாயாரை நண்பர்களை ஏவி கொன்றதாக கைது செய்யப்பட்ட பெண்மணியை விடுவிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பெண்மணியை அந்த வழக்கு தொடர்பில் காவலில் வைப்பதற்கான எந்த காரணமும் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் கோப்புகளையும் மைல்ஸ் மாவட்ட நீதிமன்றம் சேகரித்துள்ளது.
இருப்பினும் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது, செப்டம்பர் வரை இந்த வழக்கு தொடர்பில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சான்றுகள் சேகரிக்கும் செயற்பாட்டின் முடிவில், சுவிஸ் பெண்மணியின் பாதுகாப்புக் காவலை நீட்டிப்பதை நியாயப்படுத்தும் தடுப்புக்காவலுக்கான காரணங்கள் இனி பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.
மட்டுமின்றி குறித்த பெண்மணியால் மீண்டும் ஒரு ஆபத்து நேரும் என்ற அச்சம் தேவையில்லை எனவும்,
எஞ்சிய குற்றம் சாட்டப்பட்டவர்களுடனான ஒப்பந்தங்கள் இனி எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுமார் 300,000 பிராங்குகள் தொகையை அபகரிக்கும் நோக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு 46 வயதான சுவிஸ் பெண்மணி தமது நண்பர்களை ஏவி தாயாரை கொலை செய்தார் என்பதே குற்றச்சாட்டு.
இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் 2016 முதல் சிறையில் இருந்து வந்துள்ளனர். இதில் கட்டுமான தொழிலாளியான 37 வயது நபரே கொலை செய்தார் என நம்பப்படுகிறது.
இன்னொருவர் 31 வயதான மதுபான விடுதி ஊழியர், விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த ஆண்டு கொலம்பியாவுக்கு தப்பி ஓடினார்.
தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 46 வயதான சுவிஸ் பெண்மணியும் விடுவிக்கப்பட்ட, கொலை செய்ததாக நம்பப்படும் 37 வயது கட்டுமான தொழிலாளி மட்டுமே சிறையில் இருந்து வருகிறார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.