வெலிமடை, காவல்துறை பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் இரட்டைமாடி வீட்டுக்குள் வைத்தே 60 வயதுடைய கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்றும் குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான விசேட விசாரணைகளை வெலிமடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



















