ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிவாரண பணிகளுக்கு வெளியே சென்றபோது கொரோனா பரவி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், எம்எல்ஏ-விற்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திமுக சென்னை மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வுமான ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது நினைவுக்கூரத்தக்கது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பரவலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது.