எதிர்வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தேர்தல் விஞ்ஞாபனம் எதனையும் வெளியிடாது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின்போது வெளியிட்ட கொள்கை பிரகடனத்தையே இம்முறையும் மக்கள் முன்னிலையில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இம்முறை தேர்தல் பிரசார பேரணிக்கு பதில் செய்தியாளர் மாநாடுகளையே நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொள்வார்கள் எனவும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடுவீடாக சென்று பிரசாரத்தை நடத்தும் திட்டமும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.