ஸ்ரீலங்காவில் உள்ள சகல மிருகக்காட்சி சாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 20 ஆம் திகதி தொடக்கம் கொரோனா அச்சம் காரணமாக சகல மிருகக்காட்சி சாலைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் சுகாதார அமைச்சின் அறிவுரைகளையும், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளையும் பின்பற்றி மிருக காட்சி சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மிருகக்காட்சி சாலைகளுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் உரிய சுகாதார அணுகுமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.