பேருந்துகளுக்கான கட்டணத்தை அதிகமாக அறிவிடுவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்பட மாட்டது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சாதாரண பேருந்துகளுக்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு பேருந்து சங்கங்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
நாடு முழுவதும் சாதாரண கட்டண அறவீட்டுடன் இயங்கும் பேருந்துகள் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
கொரோனா தொற்றுக்கு முன்னர் பெற்ற வருமானத்தில் 50 வீத வருமானம் குறைவடைந்துள்ளதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆசன எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை ஏற்றிச் செல்லும் அரை சொகுசு பேருந்துகளில் அறவிடப்படும் கட்டணத்தை சாதாரண கட்டணத்தை அறிவிடும் பேருந்துகளுக்கும் அறவிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த பிரச்சினை தொடர்பில் எதுவித தீர்மானங்களும் அறிவிக்கவில்லை.
எந்த விதத்திலும் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்க முடியாது.
ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்வதால் நட்டம் ஏற்படாது.
பேருந்து சங்கங்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் காணப்படின் அதனை ஈடுசெய்வதற்கு வேறு வழிகள் குறித்து ஆலோசிக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.