பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 16 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்தமைக்கான சான்றிதழும் கடற்படையினரால் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்த 302 பேர் அங்கிருந்து வெளியேறிவுள்ளனர்.
இதேவேளை மேலும் 86 பேர் தொடர்ந்தும் அங்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.