எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சிப் பதவியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறுகின்ற நிலையில், அதற்கு சந்தர்ப்பத்தை வழங்கி தாம் அமைதியான முறையில் வேறு கூட்டமைப்பொன்றை உருவாக்கியதாக சஜித் கூறினார்.
எனினும், எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்குப் பின்னர் சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக உறுதியளிப்பதாக சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தாம் அமைதியாக இருந்தாலும், இன்னும் பலமாகவே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் , தாம் எழுந்தவுடன் யாராலும் அதனை வீழ்த்த முடியாது என ரவி கருணாநாயக்க இதன்போது மேலும் கூறினார்