திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற தனது சகோதரியை பிறந்த வீட்டுக்கு அழைத்துவரும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று மாலை மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மஸ்கெலியா காட்மோர் ரோஸ்பில்ட் பகுதியில் கொங்ரீட் தூண் ஒன்றில் மோதுண்டு பலத்த காயமடைந்துள்ளார்
இந்த நிலையில் அவரை டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தினங்களுக்கு முன்னர் திருணம் செய்த தனது சகோதரியை, தமது சொந்த வீட்டில் இடம்பெறவிருந்த வைபவம் ஒன்றுக்கு அழைத்து வருவதற்காக ஏற்பாடுகளைச் செய்வதற்காக குறித்த இளைஞர் மோட்டார் சகோதரியின் வீட்டிலிருந்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் மஸ்கெலியா புரன்விக் இராணி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான ராஜ்குமார் சுமன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் சடலம் டிக்கோய கிழங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹட்டன் நீதிவானின் மரண விசாரணைகள் முடிவுற்றதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.