பிரித்தானியாவில் வலி நிவாரனிகள், இன்ஹேலர்கள் மற்றும் இன்சுலில் போன்ற மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்படுவதால், மருந்துகளின் அவசரகால கையிருப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இருப்பினும் கடந்த சில வாரங்களாக ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது வலி நிவாரணிகள், இன்ஹேலர்கள் மற்றும் இன்சுலின் போன்ற மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், முக்கிய மருந்துகளின் அவசரகால கையிருப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
பற்றாக்குறை அச்சங்கள் அதிகரிக்கும் நிலையில் போரிஸ் ஜோன்சனுக்கு அவசரகால மருந்துகளின் இருப்புக்களை அமைக்குமாறு கூறப்பட்டுள்ளது.
வலி நிவாரணி மருந்துகள், இன்சுலின், மயக்க மருந்துகள் போன்றவற்றின் பற்றாக்குறையைத் தவிர்க்க அரசாங்கம் சில வாரங்களுக்குள் செயல்பட வேண்டும் என்று மருந்து நிறுவனங்கள் எச்சரிப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் டெய்லி மிரர் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் பிரெக்சிட் மாற்றம் காரணமாக வழக்கமான மருந்துகளை வாங்குவதற்கு சவாலாக இருப்பதால், மருந்துகளை வாங்குவதற்கும் சேமித்து வைப்பதற்கும் பிரதமரை மெமோ வலியுறுத்துகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லாவிட்டால், Calais-Dover விநியோக பாதை மூழ்கிவிடும் என்று நிறுவனங்கள் அஞ்சுகின்றன.