இலங்கையில், கொரோனா தொற்று உறுதியான மேலும் 03 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1887 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையதினம் புதிதாக அடையாளம் காணப்பட்ட 3 பேரும் கடற்படையினர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 35 பேர் இன்று குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,287 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 589 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன் , 35 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.