யாழ் வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் ப்டுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கு குலான் பகுதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திலேயே குறித்த மூவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயம் அடைந்த மூவரில் இருவரின் நிலை ஆபத்தாகக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
படுகாயம் அடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்குப்பகுதி மக்களை கடும் பதற்றத்திற்குள்ளாகியுள்ள இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.