பாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஜனாதிபதி நாட்டின் நலன் கருதி செயற்படுத்த வேண்டும்.
இனவாதிகளையும், அரச சொத்து மோசடியாளர்களையும் மக்கள் இம்முறை புறக்கணித்து சிறந்தவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் பிரதி தலைவர் மதுமாதவ ஹேரத் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்த்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுபீட்சமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளுக்கு அமைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்கிறார்.
நாட்டில் இடம் பெறும் பாதாள உலக குழுவினது செயற்பாடுகளுககு சிறைச்சாலைகளில் இருந்தே திட்டம் வகுக்கப்படுகின்றது. என்பது பல சம்பவஙகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மாத்திரமே குற்றங்கள் குறையும். பாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும். என்பது எமது தனிப்பட்ட கோரிக்கையாக உள்ளது.
இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும். பாராளுமன்றத்தில் தனித்து ஆட்சியமைத்தால் மாத்திரமே நிலையாக அரசாங்கத்தை கட்டியெழுப்ப முடியும். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும்.
இனவாத அரசியல் புரிபவர்கள் , அரச நிதியை மோசடி செய்பவர்கள் ஆகியவர்களை பெரும்பான்மை மக்கள் இம்முறை பொதுத்தேர்தல் ஊடாக புறக்கணிக்க வேண்டும்.
சிறந்தவர்களை பாராளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்பதை கருத்திற் கொண்டு அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானங்களை எடுப்பது அவசியமாகும் என்றார்.