மற்ற நாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவது, அமெரிக்க இராணுவத்தின் பணி அல்ல. எதிரிகளிடம் இருந்து நம் நாட்டை பாதுகாப்பதே’ என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு என்பவர் கொல்லப்பட்டார். அப்போது ஏற்பட்ட வன்முறையை ஒடுக்க ராணுவத்தின் ஒரு பகுதியான, நேஷனல் கார்டு என்ற சிறப்புப் படையை பயன்படுத்தினார்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் பலர் அதிருப்தி அடைந்ததுடன், விமர்சனமும் செய்தனர்.
இந்த நிலையில், ஓக்லஹாமாவில் உள்ள அமெரிக்க ராணுவ அகாடமியில், அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ட்ரம்ப் பேசியதாவது,
நம் ராணுவத்தின் அடிப்படை கொள்கையை மீட்க உள்ளோம். வெளிநாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்படுத்துவது அவர்களுடைய பணி அல்ல. நம் நாட்டை, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதே, ராணுவத்தின் முக்கிய நோக்கமாகும்.
முடிவே இல்லாமல் நடந்து வரும் போர்களை நிறுத்த உள்ளோம். அதற்கு பதிலாக, நம்நாட்டை வலிமைபடுத்துவதில் கவனம் செலுத்துவோம்.
எங்கேயோ தொலைவில் உள்ள, பெயர்கூட தெரியாத நாடுகளுக்கு நம் படைகளை அனுப்பி வந்தோம். அமெரிக்க ராணுவம் என்ன, உலக நாடுகளின் பொலிசா…அதே நேரத்தில், நம் எதிரிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன்.
அமெரிக்க மக்களுக்கு எதிராக எங்கு எந்த நடவடிக்கை நடந்தாலும், உடனடியாக செயல்பட தயங்க மாட்டோம்.இனி எந்தப் போராக இருந்தாலும், அதில் வெற்றி நமக்கு மட்டுமே.
அடிமைத்தனம் நமது ராணுவத்தினருக்கு, உலகின் தலைசிறந்த ஆயுதங்கள், தளவாடங்கள், தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பதை நாம் உறுதி செய்துஉள்ளோம்.
அமெரிக்க வரலாற்றிலேயே, ராணுவத்துக்கு அதிக நிதியை ஒதுக்கியது நான் தான். இந்த உலகில், மிகவும் வலுவான ராணுவம் என்றால், அது அமெரிக்காவுடையது மட்டும் தான்.
ஓக்லஹாமாவில் உள்ள இந்த இடத்தில் தான், 1921ல், கறுப்பின மக்கள் அடிமைதனத்தில் இருந்து விடுதலை பெற்ற போர் நடந்தது.
அடிமைத்தனம் என்ற தீமையை அணைக்கும் போரில், நம் ராணுவத்தினர் சிறப்பாக செயல்பட்டதை எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.இவ்வாறு, அவர் பேசினார்.
ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக போராடி வரும் அமெரிக்க படைகளை படிப்படியாக விலக்கி கொள்ள, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராணுவத்தை விலக்கி கொள்ள, அமெரிக்கா முயன்று வருகிறது.அதற்கேற்ப, ட்ரம்பின் இந்த பேச்சு அமைந்து உள்ளது.