சீனத் தலைநகர் பீஜிங்கில் கடந்த 50 நாட்களுக்குப் பின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று சம்பவம் பதிவானதை அடுத்து கடும் முடக்க நிலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நகரின் மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தை ஒன்றிலேயே புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
சின்பாடி சந்தையில் மேற்கொள்ளப்பட்ட மொத்தம் 517 கொவிட்-19 தொற்று சோதனையில் 45 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகார ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் எவரும் நோய் அறிகுறிகளை வெளியிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அருகாமையில் இருக்கும் 11 சுற்றுப்புறப் பகுதிகளிலும் முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டிருப்பதோடு 10,000 சந்தை ஊழியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
சந்தையுடன் தொடர்புபட்டவர்கள், அதனை சூழவுள்ள பகுதிகளில் இருப்பவர்களை சோதனைக்கு உட்படுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைத் தாக்கம் பற்றி அச்சம் அதிகரித்துள்ளது.