பஸ் கட்டணங்களை பாரியளவில் அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை என போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரைசொகுசு பஸ் கட்டணங்களுக்கு இணையாக சாதாரண பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு பேருந்து சங்கம் கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை கடைபிடித்து சாதாரண பஸ்களில் ஆசனங்களுக்கு மாத்திரம் பயணிகளை அழைத்து செல்வதனால் பாரிய நட்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தங்களுக்கு அரை சொகுசு பஸ்களில் அறவிடப்படும் கட்டணத்திற்கு சமமான கட்டணம் ஒன்றை அறவிடுவதற்கு அனுமதிக்குமாறு தனியார் பஸ் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் கோரிக்கை தொடர்பில், கருத்து வெளியிட்ட அமைச்சர், ஜனதிபதியுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறான பிரச்சினைகள் முன்வைக்கப்படவில்லை எனவும் தற்போதைய நிலையில் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானம் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.