மக்களால் நிராகரிக்கப்பட்ட, நாட்டில் நடந்த ஊழல் மற்றும் மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அந்த கட்சியல் உயர் பதவிகளை வழங்கியுள்ளதாக தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹட்டன் நகரில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து சமீர பெரேரா இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிக தினக் கூலியாக 50 ரூபாய் வழங்கப்படுவதை எதிர்த்த முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு ரணில் விக்ரமசிங்க, தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியை வழங்கியுள்ளார்.
அதேவேளை நாட்டின் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்குவதற்காகவே தற்போதைய அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டமூலத்தையும் அதன் சட்டத்திட்டங்களையும் பயன்படுத்தி வருகிறது எனவும் சமீர பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.