தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்(TMVP) கட்சியின் உபதலைவர் திரவியம் (ஜெயம்) அவர்களின் நிலை இக்காலகட்டத்தில் யாருமே கண்டுகொள்ளாத மிகவும் பரிதாபமான நிலையிலே காணப்படுகிறார்.
நான் எங்கு இருக்கிறேன் என்பதுகூட உணரமுடியாமல் பேதலித்துப் போய் இருக்கிறார்.
குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தான் இந்தக் கட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவேன் என்பது தனக்கு நன்கு தெரிந்தும் என ஆதரவாளர்களிடையில் கூறி கவலைப்பட்டுள்ளார்.
சந்திரகாந்தன் இல்லாத பட்சத்தில், பிரசாந்தன் கையில் கட்சி சிக்கிக் கொண்டதை நினைத்து எப்பொழுதும் இவர் கவலையாய் மற்றவர்களிடம் சொல்லி புலம்புவார்.
2020 பாராளுமன்றத் தேர்தலில் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு பலமுறை சந்திரகாந்தன் இடம் கேட்டுக்கொண்டும் மறுக்கப்பட்டு அவ் ஆசனம் பிரசாந்துக்கு வழங்கப்பட்டது.
திரவியத்திற்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததை அறிந்த பனிச்சங்கேணி, வாகரை, கதிரவெளி, பால்சேனையை சேர்ந்த திரவியத்தின் ஆதரவாளர்கள் TMVP கட்சிக்கு இனி ஒருபோதும் வாக்களிப்பதில்லை என்னும் முடிவுக்கு வந்துள்ளனர்.
இது மாத்திரமல்ல இன்று தனது வசிப்பிடமாக இருக்கின்ற பேத்தாளையில் சந்திரகாந்தனின் தம்பி மார்களின் அட்டகாசத்தால் இவர் அங்கும் கறிவேப்பில்லை போல் தூக்கி அறியப்பட்டார்.
“தேர்தல் முடியும் வரை உன்னுடைய வேட புத்தியை காட்டாமல், மக்கள் மத்தியில் சிரித்து கொண்டே வாக்கு சேகரிக்க வேண்டும்” என்னும் பிள்ளையானின் தம்பிமாருடைய தரக் குறைவான கடும் எச்சரிக்கைகளுக்கு பயந்து, உள்ளே அழுது கொண்டு, வெளியே சிரித்து கொண்டு வாக்கு சேகரிக்க இறங்கவுள்ளார்.
பாவம், கடந்த பிரதேச சபை தேர்தல் கூட, இவருக்கு கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாது போன கதையாயிற்று.
ஏன் என்றால் எழுத வாசிக்கத் தெரியாது எனக் கூறி இவரிற்கு வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் பதவியையும் வழங்காது ஏமாற்றினர்.
இப்படியாக விடுதலைப்புலிகளின் காலத்தில் தளபதியாக இருந்த ஜெயம் என்பவரை தற்போது மதிக்காத நிலை எழுந்துள்ளமை பலர் மத்தியிலும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.