ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்முறை பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
இந்நிலையில், தனது பிரசாரப் பணிகளை முன்னெடுத்துள்ள அவர், பொலன்னறுவையில் புலமைப்பரிசில் சிலவற்றை இன்று வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
எனினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அந்த செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.