யாழ்ப்பாணத்தில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வடக்கில் அனைத்து இடங்களிலும் வீதிச் சோதனை நடவடிக்கைகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனால் நாம் ஒவ்வொரு கோதனைச் சாவடியிலும் இறங்கி அடையாள அட்டைகளைக் காண்பித்துச் செல்லவேண்டியிருக்கின்றது.
வாகனங்களைச் சோதனை இடுவதால் மேலும் நேரம் விரயமாவதுடன் சோதனை நடவடிக்கைகள் தமது பிரசார நடவடிக்கைகளுக்குப் பெரிதும் முட்டுக்கட்டையாக இருக்கின்றதாக கூறியுள்ளார்.
பெரிய கூட்டங்கள் நடத்த முடியாது என்பதாலும் வேட்பாளர்கள் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பதும் முடியாது என்பதால் எமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் உள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். .