பிரித்தானியாவில் இனவெறி மற்றும் சமூக சமத்துவமின்மை போன்ற காரணிகளே கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன (BAME) சமூகங்களில் கொரோனா பரவி மற்றும் இறக்கும் அபாயங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று கசிந்த அறிக்கை ஒன்றில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா பொது சுகாதார அறிக்கையில், வரலாற்று இனவெறியால் மக்கள் பராமரிப்பு அல்லது சிறந்த தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைக் கோருவது குறைவு என்று பொருள் கொள்ளலாம்.
சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், இனவாதம், பாகுபாடு மற்றும் களங்கம், பணி சார்ந்த ஆபத்து, நோயின் தீவிரத்தை அதிகரிக்கும் உடல் நிலைமைகளின் பரவலில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல காரணிகளால் BAME சமூகங்களில் கொரோனாவின் சமமற்ற தாக்கம் விளக்கப்படலாம்.
சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸால் இறக்கும் அபாயம் அதிகம் என்று இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையை தொடர்ந்து இந்த இரண்டாவது ஆவணம் வந்துள்ளது.