இலங்கையில் உள்ளவர்களில் அனேகமானோரின் காலை உணவாக பாணோ அல்லது பனிஸ்தான் உள்ளது.
அந்தவகையில் மட்டக்களப்பு கல்லடி தொடக்கம் களுவாஞ்சிகுடி வரை உள்ளவர்களும் விதிவிலக்கல்ல.
பாண் பணிஸ்தான் அவர்களின் காலை உணவாக உள்ளது.
இந்த நிலையில் இன்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெதுப்பக உணவுப்பொருளில் ஈ உடன்சேர்த்து பொதி செய்யப்பட்டிருந்த பனிஸ் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
எனவே நாட்டில் தற்பொழுது நிலவும் ஆட்கொல்லி நோய்கள் நம்மை அடைவதற்கு நாமே காரணமாக இருந்துவிடக்கூடாது.
முடிந்தவரை உணவுகளை வெளியில் வாங்குவதை தவிர்க்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.