யாழ். கோப்பாய் – கைதடி பாலத்தடியில் கடும் காற்றினால் தூக்கி வீசப்பட்ட முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கோப்பாயை சேர்ந்த 80 வயதான சந்திரசேகர் சரவணமுத்து எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்.
இவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த வெள்ளிக்கிழமை கோப்பாய் பகுதியில் இருந்து கைதடி நோக்கி பயணித்துள்ளார்.
கோப்பாய் – கைதடி பாலத்தடியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வீசிய கடும் காற்றினால் மோட்டார் சைக்கிள் நிலை குலைந்துள்ளது.
அதன்போது, பின்னால் இருந்த முதியவர் தூக்கி வீசப்பட்டு பாலத்துடன் மோதுண்டார்.
பின்னர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்