அண்மையில் இலங்கையுடன் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இரண்டு நடுகளுக்கும் இடையிலான உறவுகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ராஜதந்திரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி சி ஆர் பரிசோதனைகளை உதாசீனம் செய்து நாட்டுக்குள் பிரவேசித்ததை அடுத்து இரு நாடுளுக்கும் இடையே உறவில் விரிசல் நிலை தோன்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஊடகங்களில் அமெரிக்க தூதரக பணியாளர் குறித்து வெளிவந்த தகவல்கள் தவறாக வழிநடத்தும் நோக்கத்தை கொண்டவை என அவர் தெரிவித்துள்ளார்.
தூதரக பணியாளர் இலங்கை வருவதற்கு முன்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட நடைமுறைகளை நாங்கள் பின்பற்றினோம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர ஸ்தாபனம் என்ற அடிப்படையில் எங்களுக்கு வழங்கப்பட்ட விதிமுறைகளை நாங்கள் பின்பற்றினோம்,நாங்கள் பி சிஆர் பரிசோதனைகளை மறுக்கவில்லை எனவும் அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.