கிளிநொச்சி அக்கராயன் குளம் பகுதியில் நோய்த்தடுப்பு விதிமுறைகளை மீறி ஒன்று கூடிய 24 பேரில் 14 பேரை 24ம் திகதி வரையும் ஏனைய 10 பேரை 29ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி அக்கரயான் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடப்படுகின்றமை தொடர்பில் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று (14-06-2020) அக்கராயன் குளம் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இருபத்தி நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேற்படி இருபத்தி நான்குபேரில் பதினான்குபேரை எதிர்வரும் 24ம் திகதி வரையும்விளக்கமறியலில்வைக்குமாறும் ஏனைய பத்துப்பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நோய்த்தடுப்பு விதிமுறைகளை மீறியும் சட்டவிரோதமான முறையிலும் ஒன்று கூடியமை தொடர்பில் இவர்கள்கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருப்பதாக அக்கராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.