அனுராதபுரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பெண் குவைத்தில் இருந்து இலங்கை வந்துள்ளார். குவைத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானமையினனால் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கொரோனா வைரஸ் குணமடைந்ததாக ஹோமாகம வைத்தியசாலையில் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் 36 வயதான இந்த பெண்ணை வீட்டிற்கு அனுப்புவதற்கு வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பெண் தனது வீட்டிக்கு நேற்று முன்தினமே சென்றுள்ளார். நேற்று அவருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டமையினால் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைக்கமைய இந்த பெண்ணின் உடலில் கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால் அவரை IDH வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.