தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ளார்.
இதன்போது பொதுத் தேர்தல் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளார்.
ஏற்கனவே மஹிந்த தேசப்பிரியவினால் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை நாளைதினமே தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.