யாழில் வாள்வெட்டு தாக்குதல்களை நடத்தும் ஆவா குழுவின் தலைவர் என கூறப்படும் நபரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட 26 இளைஞரகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் வாள் வெட்டு குழுவின் தலைவர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக இளைஞர்கள் ஒன்று கூடியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் மருதனார்மடம் பகுதியில் வைத்து 26 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.