ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டில் இருந்து வரும் மிகவும் மரியாதைக்குரிய ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியனுக்கு எதிரான வேட்டை தடையின்றி தொடர்ந்து வருகிறது என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியனின் மடிக்கணினி குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
The witch-hunt against Darisha Bastians, a much respected journalist, in exile since GR assumed office, continues unabated. Laptop seized by CID; a serious affront to media ethics as the public exposure of telephone records could seriously endanger and compromise sources.
— Mangala Samaraweera (@MangalaLK) June 16, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டில் இருந்து வரும் மிகவும் மரியாதைக்குரிய ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியனுக்கு எதிரான வேட்டை தடையின்றி தொடர்ந்து வருகிறது.
குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றிய மடிக்கணினி, பொதுமக்களின் தொலைபேசி பதிவுகளை பகிரங்கப்படுத்துவது ஊடக ஆதாரங்களுக்கு பாரதூரமான அச்சுறுத்தலை விளைவிக்கும் என்பதுடன் சமரசங்களையும் ஏற்படுத்தக் கூடும் என்பதால், இந்த நடவடிக்கையானது ஊடக நெறிமுறைகளுக்கு ஏற்படுத்தும் பாரதூரமான அவமதிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.