ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை பொதுத்தேர்தலில் கூடுதலான ஆசனங்களை கைப்பற்றும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேற்பாளரும்,முன்னாள் அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
முள்ளிப்பொத்தானை பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஆட்சி சின்னா பின்னமாகி நிர்வாகம் குழம்பிப்போயுள்ளது.நாட்டில் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் ஆதிக்கம் கூடிச்செல்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு மாற்றிடான சேவைப்போக்குகளே நாட்டில் அரங்கேறிச் செல்கின்றது.
நாட்டு மக்களின் வரிச்சுமை மற்றும் மக்களின் அன்றாட பொருட்களின் விலையேற்றங்களும் தலைக்கு மேல் நிற்கின்றது. நாட்டு மக்கள் சிந்தித்துசெயற்படக்கூடிய தேர்தலாக இது கணிக்கப்படுகின்றது.
சிறுபான்மை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.சிறுபான்மை மக்கள் உங்கள் வாக்குகளை சுரண்டுவதற்காகவும், மூளைச்சலவை செய்வதற்காகவும் ஒரு கூட்டம் அலைந்து திரிகின்றது. இதற்கு நீங்கள் அடிமைப்பட்டுவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.


















