வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் சட்ட ரீதியிலான மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
ஆனால் தற்போதுள்ள மணல், அரசியல் கட்சி ஒன்றின் மாபியாவாக யாழில் உள்ள தனியார் வன்பொருள் நிலையம் (ஹாட்வெயார்) ஒன்றின் ஊடாக கொண்டு செல்லப்படுகிறது.
பாரவூர்திச் சங்கத்தினூடாக விநியோகிக்கப்பட்ட மணல் தற்போது அரசியல் மாபியாக்களால் கொள்ளையடிக்கப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மணல் சொந்தகார மக்களின் பாரவூர்திகளுக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதனால் மணற்காட்டு பாரவூர்தி உரிமையாளர்கள், மணலைக் கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் இரு நாட்களில் இந்த விவகாரம் தொடர்பில் முடிவு எட்டப்படவில்லை எனில், சனிக்கிழமையில் இருந்து தொடர் மறியல்ப் போராட்டம் வலுப்பெறும் எனவும் பாரவூர்தி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.